எஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி


எஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எப்.ஆர். கல்லூரியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரி நூலகத்தின் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதனை கல்லூரியின் முதல்வர் சுதா பெரியதாய் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பாடபுத்தகம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, மருத்துவம், தமிழ் மற்றும் ஆங்கில நாவல்கள், கட்டுரைகள், பொதுதேர்வுக்குரிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் யாஸ்மின் செய்திருந்தார்.


Next Story