ரூ.4½ லட்சத்தில் பயணிகள் நிழற்குடை
கல்லல் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பட்டு ஊராட்சி அறிகுறிஞ்சி கிராமத்தில் ரூ.4½ லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை
காரைக்குடி
கல்லல் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பட்டு ஊராட்சி அறிகுறிஞ்சி கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று கல்லல் யூனியன் சேர்மன் சொர்ணம் அசோகன் பரிந்துரையின் பேரில் கல்லல் ஒன்றிய பொது நிதி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை யூனியன் சேர்மன் சொர்ணம் அசோகன் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், ஆலம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அசோகன், வேப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story