சனி பிரதோஷ விழா
வந்தவாசியில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
வந்தவாசி
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷ விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி நந்தி பெருமானுக்கு பால், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உற்சவர் சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள வேதவைத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.
சாமி கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story