சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதி சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

கடலூர்

விருத்தாசலம்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு மகா அபிஷேகமும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் நூற்றுக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த நந்தீஸ்வரருக்கு மகாதீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


Next Story