திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே திருநறையூரில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று வாக்கிய பஞ்சாங்கப்படி மதியம் 1 மணி 6 நிமிடங்கள் அளவில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சியானது நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஹோமம், 108 கலச அபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மதியம் 1.06 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் ஞானசேகரசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story