சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்


சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில்  வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)

சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

வடபொன்பரப்பி,

சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் வடகீரனூரில் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் தலைமை தாங்கி, வாக்குச்சாவடி முகவர்களின் செயல்பாடுகள், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் சங்கராபுரம் ஒன்றிய துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் இதயத்துல்லா, நிர்வாகிகள் குமாரசாமி, ரபீக்கான், நரசிம்மன், பாதுஷா மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் மேல் சிறுவள்ளூர், மைக்கேல்புரம், அருளம்பாடி, மூங்கில்துறைப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பட்டு ஆகிய இடங்களிலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


Next Story