பள்ளிக்கூடத்தில் வடிவங்கள் தின விழா


பள்ளிக்கூடத்தில் வடிவங்கள் தின விழா
x
தினத்தந்தி 6 Aug 2023 12:45 AM IST (Updated: 6 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை பள்ளிக்கூடத்தில் வடிவங்கள் தின விழா நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் வடிவங்கள் தினம் கொண்டாடப்பட்டது. குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவ பபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சிவடிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா மற்றும் தலைமை ஆசிரியர் மாரிக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகள் வடிவங்களை மையமாக கொண்டு பாடல் பாடி, நடனம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஆசிரியை இந்துஜா வடிவங்களின் வகைகள் குறித்து விளக்கி கூறினார். மாணவர்கள், சிறு சிறு மரத்துண்டுகளை வைத்து வடிவங்கள் செய்து காட்டினர். ஆசிரியைகள் தங்கசுபா, அக்சயா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியை மகேஷ்வரி, அபிசா மாணவர்களை ஒருங்கிணைத்தனர்.


Next Story