மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி


மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி
x

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் திருமண கோலத்தில் மாணவி தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே உள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமுதா (வயது 21). இவர், திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை வரலாறு படித்து வருகிறார்.

மாணவிக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நேற்று நடந்தது. இதனை குமுதா எழுத முடிவு செய்தார். அதன்படி திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர் மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதினார். அவரை பேராசிரியர்கள் பாராட்டினர்.


Next Story