நாகூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள செம்மறி ஆடுகள்

நாகூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள செம்மறி ஆடுகள்
x

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூருக்கு விற்பனைக்காக செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம்

நாகூர்:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூருக்கு விற்பனைக்காக செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பக்ரீத் பண்டிகை

இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகனை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் வகையில், இஸ்லாமியர்கள் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்த பக்ரீத் பண்டிகையின்போதும் ஏழை, எளியோருக்கும் இஸ்லாமியர்கள் குர்பானி வழங்குவது வழக்கம். இதற்காக சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

செம்மறி ஆடுகள்

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக உளுந்தூர்பேட்டையில் இருந்து நாகூருக்கு விற்பனைக்காக 500-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Next Story