செம்மரம் கடத்தல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


செம்மரம் கடத்தல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

ஆம்பூர் அருகே செம்மரம் கடத்தல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் செம்மரம் வெட்டுதல் மற்றும் கடத்துதல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். அப்போது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சேஷாசல வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டுவதற்காக இக்கிராமத்திலிருந்து இளைஞர்கள் சிலர் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களை அழைத்து செல்லும் இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற தவறான பாதைக்கு இளைஞர்கள் செல்லக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story