புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல்


புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல்
x

புது வர்ணத்தில் ஜொலிக்கும் யானைக்கல்

மதுரை

பழங்காலத்தில் மதுரையின் வெளிவீதியை சுற்றிலும் நான்கு புறமும் பிரமாண்ட கோட்டை சுவரும், கோட்டை நுழைவுவாசலும் இருந்தது. வெள்ளையர்கள் காலத்தில் நான்கு பக்கமும் உள்ள கோட்டைச் சுவர்கள் அகற்றப்பட்டது. சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்த வெள்ளைக்கார கலெக்டரான மாரட் பெயரை அந்த வீதிகளுக்கு வைக்கப்பட்டது. இதில் மேற்கு வெளி வீதியில் ஒரே ஒரு கோட்டை வாசல் மட்டும் அகற்றப்படாமல் இன்றும் இருக்கிறது. மற்ற மூன்று பக்கமும் கோட்டைவாசல் அகற்றப்பட்டது. மதுரை வடக்கு கோட்டைவாசல் அகற்றப்பட்டதும் அந்த இடத்தில் கோட்டை வாசலின் அடையாளமாக மகாலில் இருந்த ஒரு யானை கல்லை எடுத்து வைத்தார்கள். அன்று முதல் அந்த இடம் யானைகல் என்று அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளமாக இது உள்ளது. இந்த யானைக்கல் பற்றி மக்கள் மத்தியில் ஒரு செவி வழி கதை உள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இந்த யானை சிலையை வேறு திசை பார்க்கும்படி திருப்பி வைக்கப்பட்டது. அன்று முதல் மதுரை மழையே இல்லாமல் வறட்சியை சந்தித்தது. இதையடுத்து மீண்டும் யானை சிலையை பழையபடியே திருப்பி வைக்கப்பட்டது. உடனே மீண்டும் மழை பெய்ய தொடங்கியதாக கூறப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு தற்போது யானைக்கல் அருகிலேயே காந்தியடிகள், ஜார்ஜ் சிலையும் வைக்கப்பட்டு, மாநகராட்சியால் சிறிய பூங்காவும், நீரூற்றும் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி சார்பில் பாரம்பரிய சின்னங்களை மாநகராட்சியினர் புதுப்பித்து வருகின்றனர். அதன்படி இந்த யானைக்கல்லும் புதுப்பிக்கப்பட்டு ஜொலி ஜொலிக்கிறது.


Next Story