அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை


அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை
x

திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு கப்பல் வடிவ கழிவறை கட்டப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கொரட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் போதிய கழிவறை வசதி இல்லை என கூறப்படுகிறது.

இதை அறிந்த தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ரூ.23 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட கப்பல் வடிவ கழிவறையை கட்டி கொடுத்து உள்ளது. அதில் நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் உள்ளடக்கிய 8 கழிவறை உள்ளன. இந்த கப்பல் வடிவிலான கழிவறை வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story