சிவசுந்தர விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆரணி சைதாப்பேட்டையில் சிவசுந்தர விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ஆரணி
ஆரணி சைதாப்பேட்டை மேட்டு தெருவில் அமைந்துள்ள சிவசுந்தர விநாயகர் கோவிலை புதுப்பித்து கோவில் வளாகத்தில் புதிதாக ராமர் சன்னதி, முருகர் சன்னதி, நவக்கிரக சன்னதிகள் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கோவில் அருகே 7 யாக மேடைகளும், யாககுண்டங்களும் அமைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு கலசங்கள் வைத்து சரவணன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க 4 கால சிறப்பு யாக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மங்கள வாத்தியங்களுடன் கோவில் வலம் வந்து ராஜகோபுரம், கருவறை கோபுரம், மற்றும் சிவசுந்தர விநாயகர், ராமர், முருகர், நவக்கிரக சன்னதிகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பஸ் அதிபர்கள் கே.சண்முகம், எஸ்.ரஞ்சித், நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு, தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வக்கீல் எம்.சுந்தர், எஸ்.மோகன், துரை மாமது,
அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், நகரசபை உறுப்பினர்கள், வி.ரவி, ஆ.நடராஜன், பாக்கியலட்சுமி வெங்கடேசன், கு.விநாயகம், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் வி.சிவா, மீனா ஜெயக்குமார், எஸ்.ஜோதிலிங்கம், எஸ்.கோபால், லீலா லோகநாதன் உள்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எஸ்.பழனி, நிர்வாகிகள் டி.எஸ்.சுப்பிரமணி, ஜி.வெங்கடேசன், தேவேந்திரன், நகரசபை உறுப்பினர் பி.பழனி, ஜீவானந்தம், பொறியாளர் முருகதாஸ், மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள், பகுதிவாசிகள் செய்திருந்தனர்.