சிவன் கோவில் குடமுழுக்கில் நெகிழ்ச்சி சம்பவம்.. சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்


சிவன் கோவில் குடமுழுக்கில் நெகிழ்ச்சி சம்பவம்.. சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்
x

ஆலங்குடி சிவன் கோயில் குடமுழுக்கிற்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள், பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்தனர்.

புதுக்கோட்டை,

ஆலங்குடி சிவன் கோயில் குடமுழுக்கிற்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள், பாரம்பரிய முறைப்படி சீர் கொண்டு வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலுள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் கோவிலில், நாளை குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி அப்பகுதியிலுள்ள தேவாலயம் மற்றும் பள்ளி வாசல்களிலிருந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள், பாரம்பரிய முறைப்படி சீர் எடுத்து வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

1 More update

Next Story