சிவன் கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரி


சிவன் கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரி
x

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரி நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரி நடைபெற்றது.

சிவன் கோவில்

நெல்லை தச்சநல்லூரில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

தீர்த்தவாரி

இந்த நிலையில் நேற்று சுவாமி-அம்பாள் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்து மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு எழுந்தருளினார்கள். அங்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்து கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.


Next Story