சிவன் கோவில் சித்திரை தேரோட்டம்
பாளையங்கோட்டை சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
பாளையங்கோட்டை சிவன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
சிவன் கோவில்
பாளையங்கோட்டை சிவன் கோவில் என்றழைக்கப்படும் திரிபுராந்தீசுவரர் -கோமதி அம்பாள் கோவில் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சுவாமி- அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்கார வீதி உலா நடைபெற்றது.
கடந்த 29-ந்தேதி சுவாமி, அம்பாள் அன்னவாகனத்தில் வீதி உலாவும், 63 நாயன்மார்கள் வீதிஉலாவும் நடந்தது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரதவீதியை சுற்றி நிலையம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.