சிவாஜி கணேசன் நினைவு தினம்

ஆறுமுகநேரியில் சிவாஜி கணேசன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேயன்விளையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-வது நினைவு நாள் நகர சிவாஜி ரசிகர் மன்றத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. பேயன்விளை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் மலர்களால் அவருடைய படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் எஸ்.சித்தராங்கதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் வெ.சிவகணேசன், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் கே.கே.சற்குரு, ஆறுமுகநேரி நகர காங்கிரஸ் தலைவர் எல்.ராஜாமணி, நகர செயலாளர் அழகேசன், மற்றும் சந்திரசேகர், மோகன்ராம், ராஜாராமன், ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






