மதுரையில் நெகிழ வைத்த நிகழ்வு: பணி ஓய்வு நாளில் பிரிய மனமில்லாமல் பஸ்சை முத்தமிட்டு கண்கலங்கிய டிரைவர்


மதுரையில் நெகிழ வைத்த நிகழ்வு: பணி ஓய்வு நாளில் பிரிய மனமில்லாமல் பஸ்சை முத்தமிட்டு கண்கலங்கிய டிரைவர்
x

மதுரையில் நெகிழ வைத்த நிகழ்வு: பணி ஓய்வு நாளில் பிரிய மனமில்லாமல் பஸ்சை முத்தமிட்டு கண்கலங்கிய டிரைவர்

மதுரை

திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பைக்கராவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 60). இவர் கடந்த 1993 முதல் திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் முத்துப்பாண்டி தன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். முத்துப்பாண்டி தனது ஓய்வுக்கு முன்னதாக திருநகர் மகாலட்சுமி காலனி முதல் திருப்பரங்குன்றம் வழியாக மதுரை அனுப்பானடி வரை வழித்தடத்தில் பஸ்சை ஓட்டி தனது பணியை நிறைவு செய்தார். அப்போது அவர் பஸ்சைவிட்டு பிரிய மனமில்லாமல் சீட்டில் உட்கார்ந்தபடியே ஸ்டீயரிங்கில் முகத்தை வைத்து முத்தமிட்டார். பிறகு பஸ்சை விட்டு இறங்கியதும் பஸ்சின் படிக்கட்டை தொட்டு வணங்கினார். மேலும் அவர் பஸ்சின் முன்பகுதிக்கு சென்று தனது இரண்டு கைகளாலும் கட்டி தழுவியது போன்று நின்று கண்ணீர்விட்டார். இந்த செயல் சக ஊழியர்களை நெகிழ வைத்தது. இது சம்பந்தமான வீடியோவும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து முத்துப்பாண்டி கூறும்போது, "அரசு போக்குவரத்துக்கழகத்தில் 30 ஆண்டு பணியில் நேரம் தவறாமல் பணியாற்றியதை எண்ணி பெருமைப்படுகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக பெண்களுக்கு கட்டணமில்லாத பஸ்சை இயக்க வாய்ப்பு அமைந்தது. வயது 60 என்பதால் பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெற மனம் இடம் கொடுக்கவில்லை" என்றார்.


Related Tags :
Next Story