நடிகர் விஜய் மீது காலணி வீச்சு : காவல் நிலையத்தில் புகார்


நடிகர் விஜய் மீது காலணி வீச்சு : காவல் நிலையத்தில் புகார்
x
தினத்தந்தி 4 Jan 2024 2:19 PM IST (Updated: 4 Jan 2024 2:48 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தேமுதிக நிறுவன தலைவரும் , நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். கடந்த 28 ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு , நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திவிட்டு தனது வாகனம் நோக்கி விஜய் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. இது தொடர்பான, வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி , சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story