துப்பாக்கி சுடும் போட்டி


துப்பாக்கி சுடும் போட்டி
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலைநகர் என்.சி.சி. முகாமில் துப்பாக்கி சுடும் போட்டி

கடலூர்

அண்ணாமலைநகர்

தமிழ்நாடு கூட்டு தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி.யின் ஆண்டு பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 18-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி.யில் துப்பாக்கி சுடுதலில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண்புல வளாகத்தில் நேற்று காலை இறுதிகட்ட துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதை 4-வது கூட்டு தொழில்நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் கேம்ப் கமாண்டன்ட் கர்னல் வாசுதேவன் நாராயணன் சேனா மெடல் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முன்னிலையில் என்.சி.சி. அதிகாரிகள் மேஜர் சீமான், கேப்டன் ரவிச்சந்திரன், முதன்மை நிலை அதிகாரி வெங்கடேசன், முதல் நிலை அதிகாரி ராஜசேகர், 2-ம் நிலை அதிகாரிகள் அனிதா, உதயசங்கர், ஞானசேகரன், திருவரசமூர்த்தி, 3-ம் நிலை அதிகாரி கார்த்திக் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். முகாமில் கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் 412 பேர் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story