கடையில் புகுந்து பணம் திருட்டு


கடையில் புகுந்து பணம் திருட்டு
x

மேலூர் அருகே கடையில் புகுந்து பணம் திருடப்பட்டது.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே மேலவளவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). அப்பகுதியில் மலை மீது உள்ள கருப்புகோவிலில் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை பூட்டி வைத்து விட்டு காலையில் போன போது கடையின் தகரத்தை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ரூ.9 ஆயிரம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளான். இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story