பொத்தனூர் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


பொத்தனூர் பகுதியில்  ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

பொத்தனூர் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் பொத்தனூர் பகுதியில் சாலையின் இருபுறமும் மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், ஓட்டல்கள், பழக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் சிமெண்டு பைப்புகள் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிகளவில் உள்ளன.

இந்த நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் சாலையின் இருபுறமும் தங்களது விளம்பர போர்டுகளை வைத்திருந்தனர். சில கடைக்காரர்கள் தார்சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சாலை ஆய்வாளர்கள் சங்கர், சிவகாமி மற்றும் சாலை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் பொத்தனூர் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசாரின் உதவியுடன் அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story