மார்த்தாண்டத்தில் கடைகள் அடைப்பு


மார்த்தாண்டத்தில் கடைகள் அடைப்பு
x

வணிகர் சங்கங்களின் மாநில மாநாட்டை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் கடைகள் அடைப்பு

கன்னியாகுமரி

குழித்துறை,

தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநில மாநாடு ஈரோட்டில் விக்கிரமாராஜா தலைமையிலான நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் வணிகர்கள் சங்கம் சார்பில் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அடைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று மார்த்தாண்டம் பகுதியில் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்தனர்.

இதனால் மார்த்தாண்டம் சந்திப்பு, தேசிய நெடுஞ்சாலை, மார்க்கெட் ரோடு, வடக்குத்தெரு, சி.எஸ்.ஐ. வணிக வளாகம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. குறிப்பாக பர்னிச்சர் கடைகள், துணி கடைகள், செல்போன் கடைகள், கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், ஜூவல்லரிகள் போன்றவை மூடப்பட்டிருந்தன.

அதேநேரத்தில் மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.

மார்த்தாண்டம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் சாலையில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.


Next Story