குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு சீல் வைப்பு


குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு சீல் வைப்பு
x

குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மொய்தீன் என்பவரின் கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளர் மொய்தீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story