ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி


ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி
x
தினத்தந்தி 11 July 2023 12:30 AM IST (Updated: 11 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி நடந்தது

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்றுக்ெகாடுக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுகன்யா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலாமணி, இந்திராணி, ஞானகிரேஸ், வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் 140 ஆசிரியர்களுக்கு சிவகங்கை ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபராணி, காளையார் கோவில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சோபியா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.


Next Story