யூரியா உரம் தட்டுப்பாடு


யூரியா உரம் தட்டுப்பாடு
x

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், மேல்சிறுவள்ளூர், வடபொன்பரப்பி, வடக்கீரனூர், புதுப்பட்டு, லக்கி நாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, கடுவனூர், கானாங்காடு, உலகளாப்பாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கரும்பு, நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யூரியா உரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

இதனால் பயிர்களுக்கு தேவையான உரங்களை போடமுடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரங்களை இருப்பு வைக்கவில்லை. இதனால் தற்போது கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு

இதன் காரணமாக பயிர்களுக்கு போதுமான அளவுக்கு உரம் போடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால், எங்களது பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு சென்று கேட்டால், அவர்கள் உரம் வரவில்லை என்று கூறுகின்றனர். அதே பதிலைதான் தனியார் உரக்கடை உரிமையாளர்களும் சொல்கிறார்கள். இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்


Next Story