கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்
கள் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்
பல்லடம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:- கள் உடலுக்கும், சமூகத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய ஒரு உணவுப்பொருள், மிக மிக அதிக அளவில் அருந்தும் போது மட்டுமே சிறிதளவு போதை தரும், இந்த போதை உடலுக்கு தீமை தரக்கூடிய போதையும் அல்ல, உடலுக்கு தேவையான பல்வேறு தரமான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு பானம். வெளிநாட்டு வகை மதுபானங்களும், கள்ளச்சாராயம் ஆகிய இரண்டுமே ஒரே தன்மையை கொண்டவை. அரசு விற்றால் வெளிநாட்டு வகை மதுபானம் அனுமதி பெறாதவர்கள் பெற்றால் அது கள்ளச்சாராயம் அவ்வளவுதான் வித்தியாசம். கள் குடித்து இதுவரை சமூகமும் கெட்டதில்லை, தனி நபரும் கெட்டதில்லை, உடல் நலமும் கெட்டதில்லை. அதோடு இந்த உலகிற்கு உணவளிக்கக்கூடிய உழவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது.சமூகத்தின் நன்மைக்காகவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் உலகம் முழுவதும் தடை விதிக்கப்படாத கள்ளிற்கு, இங்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருப்பது உலகில் இதுவரை விதிக்கப்பட்ட தடைகளுள் மோசமான தடைகளில் ஒன்றாகும்.தொடரும் கள்ளச்சாராய சாவுகளை தடுக்க, கள் விற்பனை அவசியமானது எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக கள்ளுக்கான தடையை நீக்கி, உழவர்களின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் உடல்நலையும் காத்திட வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
--------------