தடை செய்ய வேண்டும்


தடை செய்ய வேண்டும்
x

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்- என்.ஆர்.தனபாலன் பேட்டி

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து உயிரிழப்புகளை தடுக்க மத்திய-மாநில அரசுகள் முன்வர வேணடும். 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி சொன்னவாறு அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி தொடர்ந்து மூன்று நாட்கள் பறக்கவிட வேண்டும். இதன்மூலம் தேசிய பற்றை வெளிப்படுத்த வேண்டும்.

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழை-எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் செயலிழக்க செய்து விட்டார்கள். அதனை மீண்டும் செயல்படுத்தி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புத்துணர்வு அளிக்க வேண்டும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் டிரினிட்டன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story