காட்சிப்பொருளான புதிய மின்மாற்றி


காட்சிப்பொருளான புதிய மின்மாற்றி
x
தினத்தந்தி 23 Sept 2023 1:00 AM IST (Updated: 23 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தீர்க்க அமைத்த புதிய மின்மாற்றி காட்சிப்பொருளானது. இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை தீர்க்க அமைத்த புதிய மின்மாற்றி காட்சிப்பொருளானது. இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைந்த மின் அழுத்தம்

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி லே அவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு நந்தனார் காலனியில் உள்ள மின்மாற்றி மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ஆனால் குறைந்த மின் அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மின்சாதன பொருட்களும் பழுதாகி வந்தது. இதை தீர்க்க தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதிய மின்மாற்றி

இதை ஏற்று ரூ.3 லட்சம் செலவில் கிருஷ்ணசாமி லே அவுட் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் மின்மாற்றி காட்சிப்பொருளாக உள்ளது.

உடனடியாக...

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து, திறப்பு விழாவும் நடத்தினார்கள். ஆனால் 3 மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் அலட்சியமாக உள்ளனர். குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story