இன்னும் அதிக பயிற்சி தேவை என்பதையே காட்டுகிறது


இன்னும் அதிக பயிற்சி தேவை என்பதையே காட்டுகிறது
x

ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான தேர்ச்சி என்பது இன்னும் அதிக பயிற்சி தேவை என்பதையே காட்டுகிறது என்று காரைக்குடியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே புதுவயல் சரஸ்வதி வித்யாசாலை பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி,மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாங்குடி எம்.எல்.ஏ மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை மீது அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். தமிழகத்தில் விதிக்கப்படும் பட்ஜெட்டில் நான்கில் ஒரு பகுதி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு கேட்டு மத்திய அரசிடம் தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். தற்போது நடைபெற்று முடிந்த ஜே.இ.இ தேர்வில் நல்ல முடிவுகள் கிடைக்கும். இதில் யாரும் பயப்பட தேவையில்லை. அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளை அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சேர்க்க வேண்டும். இந்த குழந்தைகளை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் மீது சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற்று முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி குறைவு என்பது இன்னும் அதிக பயிற்சி தேவை என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story