பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஏரியூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்


பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஏரியூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Aug 2023 7:00 PM GMT (Updated: 25 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி கோட்டம் பென்னாகரம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகப்பாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், தேவராஜ் பாளையம், பையர்நத்தம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, புதுப்பட்டி, அ.பள்ளிபட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, கவுண்டம்பட்டி, எருமியாம்பட்டி மற்றும் இதர பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை தர்மபுரி, அரூர் செயற்பொறியாளர்கள் ரவி, முத்துசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Next Story