நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாமக்கல் மாவட்டத்தில்  இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமயசங்கிலி, வெப்படை

பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமாரபாளையம் வட்டம் சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெதை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிராமன பெரிய அக்ரஹாரம், சத்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வெப்படை துணை மின் நிலையத்திலும் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம் மற்றும் இளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜேடர்பாளையம்

இதேபோல் பரமத்திவேலூர் வட்டம் ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.


Next Story