இலக்கியம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


இலக்கியம்பட்டி பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x

இலக்கியம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி

தமிழ்நாடு மின்பகிர்மான வட்ட தர்மபுரி செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story