ராசிபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


ராசிபுரம் பகுதியில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசபாளையம் வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, உள்பட சுற்று வட்டார கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story