நாமக்கல் மாவட்டத்தில்இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குமாரபாளையம், உப்புபாளையம்
குமாரபாளையம் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குமாரபாளையம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு, வளையக்காரனூர், சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதேேபால் உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில், நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக்காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ெரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வெப்படை, சமயசங்கிலி
குமாரபாளையம் வட்டம் வெப்படை துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெப்படை, பாதரை, இந்திரா நகர், ரங்கனூர், நால்ரோடு, புதுப்பாளையம், இலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைக்காடு, சின்ன கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம் மற்றும் இளையாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குமாரபாளையம் வட்டம் சமயசங்கிலி துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டை பாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திப்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சத்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.