நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:45 AM IST (Updated: 20 Feb 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நாகை வடக்கு உபகோட்ட இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சித்திவினாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாகை, வேளாங்கண்ணி, நாகூர், வெளிப்பாளையம், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும், நரிமணம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் திட்டச்சேரி, திருமருகல், நரிமணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story