பொம்மிடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்


பொம்மிடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மின் பகிர்மான வட்டம் கடத்தூர் செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொம்மிடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக வே.முத்தம்பட்டி, பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசி கவுண்டனூர், பொ.துரிஞ்சிப்பட்டி, நடூர், கே.மோரூர், கண்ணப்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டகார அள்ளி, ரேகட அள்ளி, திப்பிரெட்டி அள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story