தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு


தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவருக்கு அரிவாள் வெட்டு
x

ஆலங்குளத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 60).‌ ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலராக இரண்டு முறை பதவி வகித்தவர்.‌ தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி அன்னக்கிளியை நிறுத்தினார். இதில் அன்னக்கிளி பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் ராஜதுரை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

அரிவாள் வெட்டு

பின்னர் நள்ளிரவு நேரத்தில் அவர் தனது வீட்டு அருகே நின்றபோது அங்கு வந்த மர்ம நபர் அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளார்.‌ அப்போது ராஜதுரை தனது கையால் தடுக்க முயன்றார். ஆனால் அவருடைய கை மற்றும் மார்பு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், ராஜதுரையை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரிவாளால் வெட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

‌நள்ளிரவு நேரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story