வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே புதுபெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தடுக்க வந்த அவரது தந்தைக்கு கை துண்டானது.
புதுபெண்ணுக்கு தொந்தரவு
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் கீழத்தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி. இவரது மகன் விஜய்(வயது22). இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது. இவரது மனைவிக்கு, அதே தெருவை சேர்ந்த ராஜகோபாலன் மகன் அஜித்(22) என்பவர் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்ைத தனது கணவரிடம் கூறினார். இதுகுறித்து விஜயும், அவரது நண்பர் திவாகரும் சேர்ந்து அஜித்தை தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
கை துண்டானது
இதில் ஆத்திரமடைந்த திவாகர், அஜித்தை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்க வந்த அவரது தந்தை ராஜகோபாலனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரது இடது கை துண்டானது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






