வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள மல்லார்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது39). இவருக்கும், இவரது சகோதரருக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணனை, அவரது சகோதரர்கள் உள்பட 3 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த சரவணன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனின் சகோதரர்கள் ராஜேந்திரன்(62), ராஜசேகர்(44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து( 23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்


Related Tags :
Next Story