ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் கைது
ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
தூசி
ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு தாலுகா, தூசி அருகே கூழமந்தல் கிராமத்தில் ஒருவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வருவதாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கண்காணிப்பாளர் பாண்டியன், ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தூசி போலீசார் கூழமந்தல் கிராமத்தில் உள்ள கிளினிக்கில் சோதனையிட்டனர் அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் மரிய அமல் ராஜன் (வயது 46) என்பதும் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது இதையடுத்து கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரை, ஊசிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய அமல் ராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.