சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x

சித்தி விநாயகர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ள மின் நகரில் சித்தி விநாயகர், மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு யாத்ரா தானம் புறப்பட்டு மூலவர் விமானத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story