Normal
பாமாயில் கிடைக்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
பாமாயில் கிடைக்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
விழுப்புரம்
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையில் இம்மாதத்திற்கான பாமாயில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் கடை திறக்கப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்கள், பாமாயில் வாங்குவதற்காக அந்த கடைக்கு சென்றனர். இதில் சிலருக்கு மட்டும் பாமாயில் வழங்கப்பட்ட நிலையில் பலருக்கு பாமாயில் எண்ணெய் வழங்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த ரேஷன் கடையை திடீரென முற்றுகையிட்டனர். உடனே அங்குள்ள விற்பனையாளர்கள், நாளை (அதாவது இன்று) மீதமுள்ளவர்களுக்கு பாமாயில் வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story