குடிநீர் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


குடிநீர் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
x

பரமத்தி பகுதியில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிட்டனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி பேரூராட்சியில் 1-வது மற்றும் 2-வது வார்டு பகுதியான மாவுரெட்டி மற்றும் மாதேசம்பாளையம் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது. குடிநீர் வினியோகம் செய்வது குறித்து தகவல் தெரிவிக்காமல் தண்ணீர் எடுத்து விடப்படுவதால் வேலைக்கு செல்பவர்கள் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் முறையாக குடிநீர் வழங்க கோரி நேற்று 1 மற்றும் 2-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் மணி ஆகியோரிடம் முறையாக குடிநீர் வழங்க கோரி மனு அளித்தனர். அதனையடுத்து மாவுரெட்டி மற்றும் மாதேசம்பாளையம் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் உறுதியளித்ததை தொடந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story