பாதை வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை


பாதை வசதி கேட்டு கிராம மக்கள் முற்றுகை
x

பாதை வசதி கேட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள சிங்காரக்கோட்டை கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் தங்களுடைய குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், சிங்காரக்கோட்டையில் 10 குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடியிருப்புக்கு சென்று வருவதற்கு பயன்படுத்திய பாதை திடீரென மூடப்பட்டு விட்டது. இதனால் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே எங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி செய்து தரவேண்டும் என்று கூறியிருந்தனர். கிராம மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story