சாலையின் வளைவில் சிக்னல்


சாலையின் வளைவில் சிக்னல்
x

காங்கயம் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க சாலையின் வளைவான பகுதிகளில் சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்


காங்கயம் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க சாலையின் வளைவான பகுதிகளில் சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து

தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, கிராமப்புற சாலை மற்றும் பிரதான சாலைகளாகட்டும், சிறிய சாலைகளாகட்டும், அவற்றில் விபத்துக்கள் அதிகம் நடப்பது வளைவான பகுதிகளில்தான். இப்படிப்பட்ட சாலையின் வளைவான பகுதிகளில் குறிப்பாக இரவு நேரங்களில் புதிதாக வரும் வாகன ஓட்டுனர்கள் வேகமாக வரும் போது வளைவுகள் இருப்பது தெரியாமல் வாகனத்தை இயக்கி எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதில் சில சமயம் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், சில சமயம் பலத்த காயங்களுடன் உயிர் தப்பி பிழைப்பதும் உண்டு.

இந்த நிலையில் காங்கயம் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவு, பகல் நேரங்களில் விட்டு விட்டு ஒளிர்வதால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்ட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஒளிரும் சோலார் சிக்னல் விளக்குகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

கோரிக்கை

இதேபோல் காங்கயம் நகரம், கிராம சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும் வளைவான அபாயகரமான சாலை பகுதிகளில் சோலார் ஒளிரும் சிக்னல் விளக்குகளை அமைத்து விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Related Tags :
Next Story