தேனியில் போதை பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
தேனியில் போதை பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் இந்த கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் கரண்குமார் தலைமை தாங்கினார். தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் லெனின், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் தர்மர், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், தாலுகா செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
போதைக்கு எதிராக தமிழகம் முழுவதும் 1 கோடி கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரிடம் மனுவாக கொடுக்க இருப்பதாக ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.