போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
போதைப்பொருளுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை அவுரி திடலில் நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை மற்றும் இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் மணிமாறன், புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூக பணியாளர் மதுமிதா ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினர். கல்லூரி பேராசிரியர் நந்தகுமார் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா மற்றும் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story