தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.16 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 203 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.716-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்று 2 ஆயிரத்து 486 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.726-க்கும், குறைந்தபட்சமாக ரூ.421-க்கும், சராசரியாக ரூ.647.94-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
Next Story