தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது


தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
x

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை குறைந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,490 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3,883 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.698- க்கு விற்பனையானது. நேற்று கிலோவிற்கு ரூ.17 விலை குறைந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.681-ம், குறைந்தபட்சமாக ரூ.361-ம், சராசரியாக ரூ.559.58 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.21 லட்சத்து 73 ஆயிரத்து 8 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.


Next Story